03 நவம்பர் 2008

தமிழ் - நாளிதழ் இலக்கியம்.

இன்றைய தமிழ் நாளிதழ் மற்றும் வார, மாதயிதழ்களில் பரவலாக பயன்படுத்தப்படும் சொற்கள் செய்தியை சொல்வதோடல்லாமல் அத்துடன் உணர்வுகளையும் சேர்ந்தே வெளிப்படுத்துகிறது. தமிழ் பணீ செய்த பாரதி பயனுக்கு ஈடாக செய்யாமல் மொழிமேல் உள்ள பற்றின் காரணமாக செய்தார். அவருடைய இலக்கியத்திலும் உணர்வு உண்டு. அதை தேச விடுதலை, மக்கள் முன்னேற்றம் போன்ற காரணங்களுக்காக எழுதப்பட்டது. சொற்களுக்கு சக்தி உண்டு என்பதை உணர்ந்து அதனை பொறுப்புடன் உபயோகித்தவர்.

ஆனால் இன்றோ வன்முறை, வக்கிரம் போன்ற உணர்வுகளை உந்தும் வகையில் உள்ள சொற்களை, சொற்தொடர்களை பயன்படுத்தப்படுகிறது. இதற்க்கு பல உதாரணங்கள் எடுத்து கூறலாம்.

"இன்னார் மதம் மாறினார்" "மதமாற்றம் செய்யப்பட்டார் " - மதம் என்ற சொல்லில் குரோதம் உள்ளடங்கி உள்ளது. மதம் யானைக்கு பிடுக்கும், இன்று மனிதனுக்கும் பிடிக்கிறது. " மதம் - சமயம் - குலம் " - இவை மாறுவதில்லை. மனிதன் தற்போது ஏற்றுக்கொண்ட சமயத்தை விட்டு வேறு சமயத்தை ஏற்றுகொள்கிறான். இதை ஏற்கனவே " குலம் விட்டு குலம் புகுதல்" என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- தொடரும் -

தக்ஷிணா மூர்த்தி க. மோ.
ஆரணி.

02 நவம்பர் 2008

தமிழ் - ஆரம்பம்

இந்த வார்த்தை தோரணத்தை தாங்கள் படிக்க முடிந்தால் அதுவே மின் வலையில் ஒரு வளர்ச்சி படி. முன்பெல்லாம் தமிழ் மொழியை அச்சு கோர்கவே சிரம பட்ட காலம் உண்டு. கணிணியில் தமிழில் உருவாக்க எழுத்துக்கள், எழுதும் முறை , பின்பு ஆங்கிலத்தில் தட்டு பலகையில் தட்டி தமிழில் மாற்றும் முறை போன்ற வளர்ச்சி படிகள் தமிழ் மொழி கண்டது.

தமிழ் - மொழி மட்டும் அல்லாது பண்பாடு, கலாச்சாரம், சமயம், அறநெறி, வீரம், மக்கள் பண்புகள், மனித நேயம் என்று இம்மண்ணில் எல்லாவற்றிலும் ஒன்றான கலந்துள்ளது. தமிழை மொழியாக மட்டுமே பார்ப்பது பார்பவரின் அறியாமையே.

தக்ஷிணா மூர்த்தி க. மோ.
சென்னை.